வெள்ளி, 9 மே, 2014

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்!!

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


 இந்நிகழ்வு  புதன்கிழமை (07.05.2014) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இதற்கு மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமை தாங்கினார். இதில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவும் கலந்து கொண்டார்.

இவ் இணையத்தளத்தின் மூலம் கடந்த வருடங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய திட்டங்கள் தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை தொடர்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மீனவ மக்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் செய்தி தொடர்பாக ஆர்வமுடையவர்களுக்கும் அறிவூட்டும் வகையிலேயே இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீன்பிடி தொடர்பான புதிய தொழில்நுட்பங்களையும் மற்றும் மீன் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பிலும் மீன்களின் விலைகள் தொடர்பிலும் இவ் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

மேலும் பலவிடயங்களை www.fisheries.gov.lk  என்ற மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக