சிகரெட் பெட்டிகளில் 50 -60% எச்சரிக்கை படங்களை பிரசுரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் சுகாதார அமைச்சுக்கு இன்று அனுமதியளித்துள்ளது.
புகைத்தலினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிகரெட் பெட்டிகளில் நூற்றுக்கு 80 சதவீதம் எச்சரிக்கை படங்கள் பிரசுரிக்கப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, லங்கா புகைபொருள் நிறுவனம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல்செய்திருந்தது.
இந்த மனுமீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அனில் குணரத்ன மற்றும் மாலினி குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக