திங்கள், 12 மே, 2014

யாழ். மாவட்டத்தில் களை கட்டும் வெசாக் தினம் !!!! (படங்கள் இணைப்பு)

(பூர்வீகம் செய்திகளுக்காக யாழிலிருந்து யுகேந்திரா)

யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் , புத்தரின் வரலாற்றுக் கதைகளைக் கூறும் காட்சிக் கூடங்கள் என மிகவும் பிரமாண்டமான அளவில் குறித்த பகுதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.


எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 7 மணிக்கு குறித்த வெசாக் வலையம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உள்ளிட்ட அதிகாரிகளால் திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக