இந்திய மக்களவைத் தேர்தல் வரலாற்றில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியிருப்பது புதிய சாதனையாக கருதப்படுகிறது.
தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஒட்டுமொத்தமாக தேச அளவில் 66.38 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சூழலில், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான 64.01 சதவீத வாக்குகளே மக்களவைத் தேர்தல்களில் உச்சபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 58.19 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதும் கவனிக்கத்தக்கது.
தற்போது வாக்குப்பதிவு வெகுவாக உயர்ந்திருப்பதற்கு, புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்தது ஒரு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக