செவ்வாய், 13 மே, 2014

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் உடன்படிக்கை ஒப்பந்தம்....!!!!!!!!!

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து கடந்த 6ம் திகதி முதல் 8ம் திகதி வரையில் இரு தரப்பிற்கும் இடையில் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குற்றவியல் விவகாரங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த
உடன்படிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், இலங்கையின் சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக