இரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐ.தே.க. எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க கண்டி பொலிஸாரினால் நேற்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். இதன்போது இவரை 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற விளக்கம் முடியும் வரைக்கும் நாட்டைவிட்டு செல்வதற்கு தடைவிதிக்கும் முகமாக குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக் களத்திற்கு அறிவிக்கும் படியும் மேலும் எதிர்வரும் 27ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்கும்படி பொலிஸார் மஜிஸ்திரேட்டிடம் கேட்டுக் கொண்டனர். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி 10லட்சம் வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் எனும் குற்றச்சாட்டின்பேரில் குறித்த ஆசிரியை கட்டுகஸ்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக