சனி, 16 அக்டோபர், 2010

10 வயதில் பால்ய திருமணம் செய்துகொண்ட பெண்ணின் ஓய்வூதியம்கோரி அவரது 53 வயது மகள் விண்ணப்பம்..!

10 வயதில் பால்ய திருமணம் செய்துகொண்ட பெண்ணொருவரின் ஓய்வூதியத்தைக் கோரி அவரது 53 வயது மகள் விண்ணப்பித்துள்ளார் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 54 வருடங்களுக்கு முன்பு குருநாகல் பிரதேசத்தில் இத் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் இறந்ததும் அவரது அங்கவீனமான மகள் அனுப்பிவைத்த விண்ணப்பத்தைப் பரிசீலித்தபோதே இந்த விடயம் தெரியவந்தது என ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ. திலகரத்ன தெரிவித்துள்ளார். 1946 ஜூன் 16ஆம்திகதி பிறந்துள்ள இப்பெண் 1956 செப்ரெம்பர் 6ல் திருமணம் செய்துள்ளார். 1971இல் அரச சுகாதார சேவையில் இணைந்து கொண்ட இப்பெண் 1987ல் ஓய்வுபெற்று, 1993 இல் மரணமாகியுள்ளார். அவரது மகளுக்கு தற்போது 53 வயதாகிறது. இவர் சிறுமியாக இருக்கும்போதே தந்தை பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டுள்ளார். தந்தைக்கு தற்போது 75 வயதாகிறது. தனது மனைவியின் ஓய்வூதியத்தை மகளுக்கு கொடுப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லையென்று அவர் ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார் என்றும் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக