இலங்கையின் வடக்கு பிரதேசங்களுக்கு பயணம் செய்வது குறித்து ஜப்பானிய பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அந்நாடு தளர்த்தியுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக வடக்குப் பிரதேசங்களுக்கான பயணங்களை தவிர்க்குமாறு ஜப்பான் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போது வடக்கின் பாதுகாப்பு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் இன்று அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா போன்ற நகரங்களுக்கான பயண எச்சரிக்கைகளை ஜப்பான் தளர்த்தியுள்ளது. எவ்வாறெனினும், வடக்கு பிரதேசங்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஜப்பானிய பிரஜைகள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்களுக்கான விஜயங்களை தவிர்க்குமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக