யாழ்ப்பாணத்தில் குடியேறும் நோக்கில் சிங்கள மக்கள் வருகை தருவதை ஒட்டி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இதுபற்றி தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தமக்குச் சொந்த நிலமிருப்பதாக யாழ். வந்துள்ள சிங்களக் குடும்பங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்கள் பாரம்பரியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களா என்பதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கனவே இங்கு வாழ்ந்தார்களா என்பது குறித்தும் ஆராயவேண்டும். அப்படி அவர்கள் வாழ்ந்தவர்களாக ஆதாரம் இல்லாவிடில் இதனைச் சிங்களக் குடியேற்றமாகவே கருதவேண்டும். இது தொடர்பாக யாழ். அரசஅதிபருடன் நான் பேசவிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரான எம்.சந்திரகுமார் தெரிவிக்கையில், எந்த இன மக்களும் இந்நாட்டில் எப் பகுதியிலும் வாழலாம். ஆனால் அதற்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால் இன்றைய யாழ்ப்பாண சூழ்நிலையில் காணிகளைப் பகிர்ந்தளிக்கின்ற அளவுக்கு அரச காணிகள் எதுவுமில்லை. சிங்கள மக்கள் மீண்டும் தங்களை மீளக் குடியமர்த்துமாறு அரசஅதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்று என்னால் உடனடியாகக் கூறமுடியாது. இது தொடர்பாக பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
சனி, 9 அக்டோபர், 2010
யாழ்ப்பாணத்தில் குடியேறும் நோக்கில் சிங்கள மக்கள் வருகை..!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக