சனி, 9 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி புத்தளம் பஸ் நிலையத்தில் கையெழுத்துப்பேறும் நடவடிக்கை..!

இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரும் மகஜரில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்றுக்காலை புத்தளம் பஸ் நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், புத்தளம் மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளருமான சமன் புஷ்பகுமார தலைமையிலான குழு இந்த ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தது. இந்நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு இம் மகஜரில் கையெழுத்திட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக