சனி, 16 அக்டோபர், 2010

திருமலை உள்ளுராட்சி நிறுவன தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன..!

திருமலை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி நிறுவனங்களில் நிலவிய தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நேற்று புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதன் மூலம் சீர்செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள திருமலை மாவட்டத்தின் பல்வேறு உள்ளுராட்சி நிறுவனங்களில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவியதன் காரணமாக பல்வேறு வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதில் உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் பல்வேறு தடங்கல்களை எதிர்நோக்கி வந்தனர். இது விடயமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் காரணமாக நேற்றுமுதல் செயற்படும் வகையில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பதவி வெற்றிடம் நிலவிய சகல பிரதேச சபைகளுக்கும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். நேற்றுக்காலை முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இதன்பயனாக நெல்சிப் கருத்திட்டம் திருமலை மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படக்கூடியதாகவும் இதன் காரணமாக பல வறிய குடும்பங்கள் பயனடைய வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக