வியாழன், 7 அக்டோபர், 2010

கண்டியில் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி கையடக்க தொலைபேசிகளை பறித்து வந்த பொலிசார் கைது..!

கண்டி நகரில் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பறித்து செல்லும் நான்கு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த கண்டி பொலிஸார் கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரையும், சார்ஜன்ட் ஒருவரையும் நேற்றையதினம் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் சீருடையில் சென்று நகரில் நடமாடும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி அவர்களின் கையடக்க தொலைபேசிகளை கண்டி பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஒருவர் பறித்து வருவதாக நான்கு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இம் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைதுசெய்யுமாறு சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்தன விசேட குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஆலோசனை வழங்கிருந்தார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நேற்றுக்காலை இன்ஸ்பெக்டர் ஒருவரையும் சார்ஜன் ஒருவரையும் கைதுசெய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்செய்துள்ளனர். இந்நிலையில் நீதவான் குறித்த இருவரையும் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக