இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழும் வடபகுதி மக்கள் மீளக்குடியேறிய போதிலும் அவர்களுக்கு உலக வங்கியினூடாக வழங்கப்படும் வீடமைப்புக்கான நிதிஉதவி தொடர்ந்தும் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கூறினார். இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வாய்மூல விடைக்காக நூர்தீன் மசூர் எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:, வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள மக்களுக்காக உலக வங்கி வீடமைப்பு உதவித் திட்டத்தின்கீழ் 4460 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதில் 2218 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 778 வீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன. அதில் 314 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. புதிதாக வீடு கட்ட 3,25,000 ரூபாவும் வீடுகளை திருத்தியமைக்க ஒரு இலட்சமும் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது. 2006 ஆய்வுகளின்படி நலன்புரி நிலையங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 50ஆயிரம் ரூபாவும் 2ஆம் கட்டமாக 60 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வியாழன், 7 அக்டோபர், 2010
புத்தளம் மாவட்டத்தில் வாழும் வடபகுதி மக்கள் மீளக்குடியேறிய போதிலும் உதவி வேண்டும்..!
இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழும் வடபகுதி மக்கள் மீளக்குடியேறிய போதிலும் அவர்களுக்கு உலக வங்கியினூடாக வழங்கப்படும் வீடமைப்புக்கான நிதிஉதவி தொடர்ந்தும் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கூறினார். இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வாய்மூல விடைக்காக நூர்தீன் மசூர் எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:, வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள மக்களுக்காக உலக வங்கி வீடமைப்பு உதவித் திட்டத்தின்கீழ் 4460 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதில் 2218 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 778 வீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன. அதில் 314 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. புதிதாக வீடு கட்ட 3,25,000 ரூபாவும் வீடுகளை திருத்தியமைக்க ஒரு இலட்சமும் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது. 2006 ஆய்வுகளின்படி நலன்புரி நிலையங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 50ஆயிரம் ரூபாவும் 2ஆம் கட்டமாக 60 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக