ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு ஒன்று கட்சி சம்மேளனத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த யாப்பு அடுத்த கட்சி சம்மேளத்தின்போது நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதுளை மாவட்டம் மஹியங்கணை மற்றும் ரிதிமாலியத்த ஆகிய பிரதேஷ ஷபைகளின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் தியத்தலாவையில் இடம்பெற்ற ஷந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதவிர, கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் கீழ்மட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக புதிய ஒழுக்காற்று கொள்கையொன்றை பின்பற்றப் போவதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சனி, 11 செப்டம்பர், 2010
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு..!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக