ஞாயிறு, 2 மே, 2010

அரசியலில் வருகிறார் குஷ்பு?

தற்போது லண்டனில் குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் குஷ்பு பேட்டி ஒன்றில் காங்கிரஸ் எனக்குப் பிடித்தமான கட்சி, அரசியலில் இணைவதைப் பற்றி ஊர் வந்த பிறகு முடிவெடுப்பேன் எனக் கூறியதாக செய்திகள் வெளியாகின. தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்துவிட்டது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் வழக்கை விசாரித்து வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குஷ்பு மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். தனக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி இருப்பதால் கட்சியில் இணைய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக