திங்கள், 10 மே, 2010

சன் பிக்சர்ஸ் வழங்கும் "சிங்கம்" ரிலீசுக்கு தயாராகி விட்டது..!!

சன் பிக்சர்ஸ் வழங்கும் "சிங்கம்" ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. சிங்கம் படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'துரைசிங்கம்'. ஹரியின் முந்தைய படமான சாமி போல் இந்தப் படமும் பெரிதும் பேசப்படும் என பட வட்டாரங்கள் கூறகின்றன. மேலும் சூர்யாவின் போலீஸ் கதாபாத்திரம் மற்ற படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரத்தை விட மிகவும் சுவரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ஹரியிடம் சிங்கம் படத்தை பற்றி கேட்டோம்.சிங்கம் அவ்வளவு சீக்கிரத்துல பாயாது. பாய்ஞ்சுதுன்னா, எதிராளிய காலி பண்ணிட்டு தான் வரும். அப்படியான கேரக்டர்தான் சூர்யாவுக்கு. சிங்கம் ஒரு அடி அடிச்சா, ஒன்றரைடன் வெயிட்டு இதுதான் படத்துல சூர்யா பேசுற பஞ்ச். விதவிதமான கோணத்துல சூர்யா தெரிவார். கிராமம், நகரம்,மாநகரம்ங்கற மூμ ஏரியாவுல கதை பயணிக்கும். இதுதான், இப்படித்தான் இருக்கும்னு எந்த காட்சியையும் யூகிக்க முடியாத திரைக்கதை, படத்துக்கு பலமா இருக்கும் என்கிறார் ஹரி.இதற்கிடையில் சிங்கம் படத்தின் பாடல் நாளை வெளியீடப்படுகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளளார். படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக