நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஆயுதம் ஏந்தியிருக்கும் எவரையும் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்திருப்பதாக அவரது ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆயுதங்களைக் களைந்து வன்முறைக் கலாசாரத்தைக் கைவிட்டு ஜனநாயக வழியில் இருப்போரே கிழக்கு மாகாணத்தில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மேலும் தெரிவித்ததாக அவரது ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக