வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

சின்னங்கள் வேறாக இருப்பினும் நல்லாட்சியை ஏற்படுத்த ஐ.தே.கட்சிக்கு ஆதரவு -ஜே.வி.பி. கூறுகிறது..!

வௌ;வேறாக இருப்பினும் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்;வா தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுமாயின் ஜே.வி.பி. பெரும்பாலும் தனது சின்னமான மணி சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்றில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை இறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை சகல கட்சிகளுடன் குறிப்பாக பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சியுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகின்றன யானைசின்னத்தின் கீழ் ஒருபோதும் ஜே.வி.பி.போட்டியிடாது அவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி தனது சின்னத்தில் போட்டியிடுமாயின் ஜே.வி.பி.மணி சின்னத்திலேயே பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் எவ்வாறாயினும் இறுதிக் கட்ட தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்கவில்லை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சியும் ஜே.வி.பியும் வௌ;வேறாக போட்டியிடும் நிலை ஏற்பட்டாலும் தேசிய செயற்பாடுகளில் ஓரணியாகவே செயற்படுவோம். எமது இலக்கு நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து தற்போது காணப்படும் சர்வாதிகார ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதாகவும் எனக் கூறினார். அதிகார ரீதியிலான மாற்றங்களில் எமது அதிகாரிகளிடம் எதிர்பார்க்கப்படும் நடுநிலை தவறாமை நல்ல ஆளுகைக்கு பங்கம் விளைவிக்கும் தேர்தலின் பின்னர் வேட்பாளர்கள் அவர்கள் ஆதரவாளர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திய தகவல்துறையினர் அச்சுறுத்தப்படுவது துன்புறுத்தப்படுவது தீய பழக்கம் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் காணாமல்போன பத்திரிகையாளர் எக்னாலிகொட குறித்த தகவலை எதுவும் அறியமுடியாதுள்ளது இவ்வேளையில் மிகுந்த கலவரத்தை உருவாக்கும் இந்த செய்தி குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசியல் பகிர்வு நல்ல ஆளுமை ஊடக சுதந்திரம் பொருளாதார அபிவிருத்தி இல்லாமையினால் உள்ளவர்களுக்கு சமத்துவ உரிமை நடைமுறைப்படுத்தல் சுயாதீனமான நீதித்துறை, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றை எமது தேசம் எதிர்கொள்ளும் போது இப்படியாவற்றிற்கு நாம் கூட்டாக முன்னுரிமை கொடுத்து இன்றிலிருந்து கரிசனையுடன் செயல்பட வேண்டும் ஜனாதிபதியை அமைச்சரவை எதிர்கட்சிகளை இந்த குறித்த இலட்சியங்களை நோக்கி செயல்நோக்குடன் அர்ப்பணிப்புடனும் செயல்பட வற்புறுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக