சனி, 20 பிப்ரவரி, 2010

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்னத்தின் கனவு கலைந்தது

மாகாண சபையில் உறுப்பினரான ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) உறுப்பினர் இரா.துரைரட்ணத்தின் ரி.என்.ஏ.யில் போட்டியிடும் கனவு கலைந்துள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பான DTNA போட்டியிடாமல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் TNAபட்டியலில் போட்டியிட்டு பாராளுமன்ற ஆசனத்தை கைப்பற்ற முயற்சி மேற்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) அணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் TNA இடம்கிடைக்காதமையால் கவலையடைந்துள்ளார். அவருக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இனியாவது துரைரட்ணம் போன்றவர்கள் பாராளுமன்ற ஆசனங்களுக்காக கட்சி தாவும் முயற்சியை கைவிட்டு உரிய கட்சியில் போட்டியிட்டு மக்கள் பணியை முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக