
வவுனியாத் தடுப்பு முகாங்களிலிருந்து 49 பெண்கள் கொழும்பு பூசா தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் மெனிக்பாம் தடுப்புமுகாம், பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம்களிலிருந்தே பெண்கள் பூசா தடுப்புமுகாமிற்கு சிறீலங்காப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ் 10பேரும், கிளிநொச்சியிலிருந்து 17பேரும் முல்லைத்தீவிலிருந்து 14பேரும், மன்னாரிலிருந்து 4பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா, புத்தளம், அம்பாறை, திருமலை ஆகிய இடங்களிருந்து தலா ஒருவர் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக