ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

மஹிந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி கருணாநிதி வேண்டுகோள்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் பற்றி தேர்தலின் போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினாலோ அன்றி தாமதித்தாலோ, திமுக மௌனமாக இருக்காது என கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் திமுக தயங்காது என முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று என்பதையும் முதலமைச்சர் மு. கருணாநிதி வலியுறுத்தினார்.
மகா அலெக்சான்டர் தான் வெற்றி கொண்ட போருஸ் மன்னனை எப்படி நடத்தினான் என்பதை இலங்கை ஆளும் தரப்பினர் மறந்து விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக