இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை விடுவிக்ககோரி இலங்கையில் பல ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸிலும் பேரணி நடந்துள்ளது. அங்கு வசித்து வரும் இலங்கையர்கள் ஒன்றுகூடி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்த அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர் இந்த பேரணியை ஒரு குறிப்பிட்ட அமைப்பும் ஏற்பாடு செய்யவில்லை. இந்தப் பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரினதும் கையொப்பங்களும் அடங்கிய மனுவொன்று இலங்கை தூதரக பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிடப்பட்ட இந்த மனுவில் சரத்பொன்சேகாவின் கைதுக்கு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு அவரை விடுவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
சரத்தை விடுவிக்குமாறு அமெரிக்கா லாஸ் ஏஞ்சலிஸில் பேரணி..!
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை விடுவிக்ககோரி இலங்கையில் பல ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸிலும் பேரணி நடந்துள்ளது. அங்கு வசித்து வரும் இலங்கையர்கள் ஒன்றுகூடி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்த அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர் இந்த பேரணியை ஒரு குறிப்பிட்ட அமைப்பும் ஏற்பாடு செய்யவில்லை. இந்தப் பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரினதும் கையொப்பங்களும் அடங்கிய மனுவொன்று இலங்கை தூதரக பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிடப்பட்ட இந்த மனுவில் சரத்பொன்சேகாவின் கைதுக்கு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு அவரை விடுவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக