வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முன்வருமாறு.. வீ.ஆனந்தசங்கரி அழைப்பு


பேராசையும் பேராவலும் கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முன்வருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மக்களுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பணியாற்றக்கூடிய இளைஞர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியில் தாம் தொடர்ந்து செயற்படுவது யாருக்கும் தடையாக இருக்குமானால் கட்சியை பொறுப்புள்ளவர்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள தயாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக