வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

முத்தையா முரளிதரன் ஆளும் கட்சியில் போட்டி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உபதலைவராக போட்டியிடவுள்ளார். முத்தையா முரளிதரனை வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தின் பின்னணியில் எஸ்.பீ.திஸாநாயக்கவே இருந்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனைப் படைத்துள்ளார். முத்தையா முரளிதரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைப்பதன் மூலம் தமிழ் சிங்கள இளைஞர்களின் வாக்குகளைக் கவர முடியும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரிய ஆளும் கட்சியில் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். எனினும் முத்தையா முரளீதரன் இது குறித்து உத்தியோகபூர்வமாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக