வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

மூன்று எதிர்க்கட்சிகள் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டி

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆகியன யானைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்சிகளின் தலைவர்களான ரவூப்ஹக்கீம், மனோகணேசன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், புதிய சிஹலஉறுமய, றுஹ_ணு கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. குறித்த கட்சிகள் தங்களது வேட்பாளர் விபரங்களை ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைத்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் வேட்புமனுத் தயாரிப்புப் பணிகள் பூர்த்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பெப்பரவரிமாதம் 24 அல்லது 25ம் திகதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தீhமானிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா தலைமையிலான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. அன்னப்பட்சி சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட ஜே.வி.பி ஆர்வம் காட்டியதாக கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட எடுத்தத் தீர்மானம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு தமது கட்சி கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 கருத்து:

  1. Dear Administrator,
    i Would like to add our website http://vettrinews.com/ to your reputed page's home. Please let me know the procedure for above request.
    Thanks & Regards,
    வெற்றி செய்திகள்

    பதிலளிநீக்கு