சனி, 20 பிப்ரவரி, 2010

சபாநாயகர் லொக்குபண்டார ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளார்..!!

ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினராக இருந்து கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி பாராளுமன்ற சபாநாயகராக செயற்பட்ட வி.ஜே.மு. லொக்குபண்டார அவர்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டார் பண்டாரவளை நகரில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரகா செயற்பட்ட வி.ஜெ.மு. லொக்குபண்டார அவர்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டார். பண்டாரவளை நகரில் இன்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆறாவது நாடாளுமன்றத்தின் சபாநாகருமான லொக்கு பண்டார இந்த முடிவை எடுத்துள்ளார். இவரது புதல்வர் பதுளை மாவட்டத்தில் ஆளும்கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக