ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

மருதானை ரயில் நிலையத்திலிருந்து தாண்டிக்குளம் நோக்கி விசேட ரயில் சேவை..!

கொழும்பு, மருதானை ரயில் நிலையத்திலிருந்து தாண்டிக்குளம் நோக்கி விசேட ரயில் சேவையொன்று இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்றுகாலை 7மணியளவில் தாண்டிக்குளத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த ரயிலில் 11கொள்கலன்களில் வடபகுதிக்கான அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சேவையை எதிர்வரும் தினங்களிலும் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக