
வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி உறவினர்களுடன் தங்கியிருக்கும் 2,216பேர் கடந்த சனிக்கிழமை பெரியபரந்தன், திருநகர் வடக்கு மற்றும் மேற்கு, கரச்சி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின்போது அங்கிருந்து இடம்பெயர்ந்த 2லட்சத்து 35ஆயிரம் பேர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவ்வருடம் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு பணிப்புரை விடுத்திருத்தார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டமைக்கு அமைய சுமார் 1லட்சத்து 75ஆயிரம் பேர் ஏற்கனவே வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் தாமதமடைந்ததைத் தொடர்ந்து மீள்குடியேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இம்மாதம் 02ம் திகதிமுதல் மீள்குடியேற்றப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக