
லங்கா ஈநியூஸ் இணையதளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமற் போயிருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். கொழும்பு, இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு நேற்றுக்காலை 10.30அளவில் அவர் சென்றதாகவும், நேற்றிரவு 8.30வரை அலுவலகத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ள அவரது மனைவி, அதன்பின்னர் கொஸ்வத்தைப் பகுதியில் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருப்பதாக அவர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட நண்பரிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் இரவு 9மணிமுதல் தொடர்ச்சியாக அவரது கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது செயலிழந்த நிலையில் இருப்பதாக பிரகீத் ஹெக்நேலியகொடவின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக