இலங்கை சுதந்திரக்கட்சியிள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தனது ஆதரவு சரத் பொன்சேகாவுக்கே என அறிவித்துள்ளார். நேற்றையதினம் அவரின் ஹொரகொல்ல வலவ்வவுக்கு சென்று சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் ஆனால் சிலநாட்களுக்கு முன்னர் மவுண்ட் லாவண்யா ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சந்திரிக்கா தாம் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்கப் போவதில்லை எனவும் இத்தேர்தலில் தாம் நடுநிலையாக இருக்கப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால் திடீரென கடைசிநேரத்தில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமையானது அவர் தனது பெற்றோர்களை அவமதிக்கும் செயலெனவும் சந்திரிக்காவின் முடிவை தாம் கண்டிப்பதாகவும் ஊடகவியலாளர்களுக்கு விடுத்த அறிக்கையில் இலங்கை சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக