தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு வந்திருக்கும் வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தற்சமயம் தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையப் பிரதிநிதிகள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் தங்களுடைய தேர்தல் கடமைகளை நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர். இவர்கள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு தங்களுடைய கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக நாடு முழுவதும் 68ஆயிரம் பொலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக