புதன், 16 டிசம்பர், 2009

புலிகளால்உருவாக்கப்பட்ட TNAகுடையின்கீழான கூட்டமைப்பில் DTNA இணைந்து கொள்ள மாட்டாது!

புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பில்(TNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு(PLOTE & EPRLF & TULF) இணைந்து கொள்ளமாட்டாது என்று தெரியவருகின்றது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரபல ஊடகவியலாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், புலிகளினால் உருவாக்கப்பட்ட TNA என்ற குடையின் கீழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளதுடன், தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விடயம், மீள்குடியேற்றம், காணி சம்பந்தப்பட்ட விடயங்களில் ரி.என்.ஏ.-டி.ரி.என்.ஏ கட்சிகளிடையே இணக்கபாடு காணப்பட்டுள்ளது. TNA என்ற கூட்டினை கலைத்து புதிய கூட்டு ஒன்று உருவாகுமானால் அவ் கூட்டமைப்பில் DTNA அடங்கிய கூட்டமைப்பும் ஒரே குடையின் கீழ் இணைந்து கொள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் அவ் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக