சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறிலங்கா அரசு விலக்கிக் கொள்வதற்கான ஆலோசனையை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கியதாக, பாகிஸ்தானின் செய்தி நாளிதழான 'நேஷன்' வெளியிட்டுள்ள செய்தியொன்றில் தெரிவித்துள்ளது.சிறிலங்காவில் போரின் பின்னதாக இராணுவப்புரட்சி ஏற்படவுள்ளதாக இந்திய உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலை சுட்டிக்காட்டியே, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மேற்படி ஆலோசனையை வழங்கியதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின், சிறிலங்காவில் இராணுவ வலிமை அதிகரித்துக் காணப்பட்டதால், அங்குள்ள ஜனநாயகத் தன்மைக்கு இராணுவ அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் தென்படுவதாகவும், ஏற்கனவே பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தள்ளதாகவும், குறிப்பட்ட மன்மோகன் சிங், அப்படியான ஒரு நிலையை சிறிலங்காவில் தோற்றுவிக்க இடமளித்துவிடக் கூடாது. ஆகையால், இராணுவ தளபதியின் அதிகாரத்தை உடனடியாகக் குறைத்து, அந்தப் பதவிக்கு வேறொருவரை நியமிப்பது நல்லதெனவும் ஆலோசனை தெரிவித்ததாக அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாகவே சிறிலங்காவில் அமைதி நிலை காண்பதற்கு பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு செயற்படும் இந்தியாவினது உளவுத்துறை, அங்கு இந்திய இராணுவ ஆதிக்கம் நிலவவேண்டுமென்பதற்காக, உண்மையில் அங்கு ஒரு அமைதிநிலை உருவாகிவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அதனாலேதான் சரத் பொன்சேகாவை பதவியிலிருந்து அகற்றி அங்கு ஒரு குழப்பமான சூழலை மீளவும் இந்தியா உருவாக்கியுள்ளது என்ற தொனிப் பொருளில், அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக