புதன், 16 டிசம்பர், 2009

இதுவரை 17வேட்பாளர்கள் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு இதுவரை 17வேட்பாளர்கள் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். இன்று நண்பகல்வரை 14வேட்பாளர்கள் கட்டுப்பணங்களை செலுத்தினர். இதனிடையே இன்றுபிற்பகல் தமிழ் கூட்டமைப்பு எம்.பி என்.கே.சிவாஜிலிங்கம், என்.எம்.முஸ்தபா மற்றும் இந்துன் விஜேகோன் ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளனர். இதனடிப்படையில் அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இந்தமுறை தேர்தல் அமையவுள்ளது. இதற்கு முன்னர் 2005ம்ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டிருந்தனர். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்துவது நாளையுடன் முடிவடைகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக