தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார். இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதக்கும் என்ற முடிவில் எவ்வித மாற்றம் கிடையாது. கிழக்கு மாகாண சபையை உருவாக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கும் போது தான் அந்த மாகாண சபைக்கான அதிகாரங்களையும் எமது மக்களுக்கான அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், எமது கட்சி கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்காக அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்ற சக்தியாக இருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப் பாட்டிற்கமைவாக தேர்தலில் ஆதக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அதை பகிரங்கமாகவும் அறிவித்தோம். ஆனால் சில ஊடகங்கள் முரண்பாடான சில கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. அந்த அடிப்படையில் சில அரசியல் பிரமுகர்கள் எம்மையும் ஜனாதிபதியையும் மோதவிடப் பார்க்கின்றனர். அதன் மூலமாக அவர்களது நிகழ்ச்சி நிரலை அல்படுத்த முயற்சிக்கின்றனர். நாங்கள் தனியான கட்சியாக இயங்குவதனால் சில கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்தோம். ஆனால் அமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டதன் காரணமாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்தேயாக வேண்டும். அமைச்சர் முரளிதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கேட்பவற்றைக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தோல்வியோ? வெற்றியோ? அத்தனையையும் சகித்துக் கொண்டு அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்க வேண்டும். எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகவிடம் அமுல்படுத்துவதற்கு எவ்வித திட்டமோ கொள்கைகளோ கிடையாது. அவர் தனியானதொரு கட்சியைச் சார்ந்தவரல்ல. தேர்தலில் எமது ஜனாதிபதியை தோற்கடிப்பது மாத்திரம்தான் அவரது அவா ஆகும். சரத் பொன்சேகா “”தான் தமிழர்களை துன்புறுத்தியவன்” என்று கூறி தென்பகுதி மக்களிடம் வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் அவரை ஆதக்க முடியாது. இதேவேளை தமிழ் வேட்பாளரொருவர் இந்த நாட்டில் ஜனாதிபதியாக முடியாது. அப்படியிருக்க இத்தேர்தலில் 51 சதவீத வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக முடியும் என்று தேர்தல் சட்டம் இருப்பதனால் தமிழர்களின் வாக்கு பிரியும் பட்சத்தில் எவரும் வெற்றி பெற முடியாது என்று கூறும் கோமாளித்தனமான கருத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றார்.
புதன், 16 டிசம்பர், 2009
அமைச்சர் முரளிதரன் தோல்வியோ? வெற்றியோ? அத்தனையையும் சகித்துக் கொண்டு அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்க வேண்டும் -சந்திரகாந்தன்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக