வியாழன், 17 டிசம்பர், 2009

சம்பூர் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்களை வழங்கவும்… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் அமைச்சர் கருணா அம்மான் நடவடிக்கை!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையாக சமைத்த உணவுகளையும், தற்காலிக குடியிருப்புக்களையும் வழங்க அமைச்சர் கருணாஅம்மான் நடவடிக்கை வெள்ளத்தால் மட்டு, திருகோணமலை மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அமைச்சர் கருணா அம்மான் அவசரமாக அமைச்சர் அமீரவி அவர்களுடன் கலந்தாலோசித்தார். அம்மக்களுக்கு தற்காலிக தங்குமிடவசதிகள், சமைத்த உணவுகளை வழங்குமாறு கேட்டிருந்தார். இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மூதூர் தொகுதியைச் சேர்ந்த அம்மன் நகர், சந்தணவெட்டை, சேருவிலை தொகுதியைச் சேர்ந்தஅரியமாங்கேணி ஆகிய பிரதேச மக்களுக்கு அமைச்சர் கருணா அம்மானின் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கினைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், அரவிந்தன், அஸ்லம், நஸ்றுல்லா ஆகியோர் அம்மக்களுக்கு சமைத்த உணவுகளையும் அடிப்படை வசதிகளையும் வழங்கி வருகின்றனர்.மூதூர் கிழக்கு பகுதிகளில் அகதிகளாக இருக்கும் சம்பூர் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்களை வழங்க அமைச்சர் கருணா அம்மான் நடவடிக்கை.23.10.2009 அன்று மூதூர் சம்பூர், தோப்பூர் கிளிவெட்டி பகுதிகளுக்கு சென்றிருந்த அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் அகதிகளாக தங்கியிருக்கும் சம்பூர் மக்களை சந்தித்தார். அவர்கள் தங்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி வேண்டியிருந்தார்கள். அதற்கு அமைய அமைச்சர் பசில்ராஜபக்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர், ஆகியோருடன் அமைச்சர் கருணா அம்மான் கலந்துரையாடி அம்மக்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் குடியேற அனுமதி பெற்றுக் கொடுத்திருந்தார். அத்துடன் சம்ப+ர் உயர் பாதுகாப்பு எல்லை வேலிக்கு அருகிலுள்ள வயல் காணிகளில் விவசாயத்தில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதுவிடயமாக அமைச்சர் கருணாஅம்மானால் மூதூர் பிரதேச செயலாளருக்கும், உரிய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன. இதேவேளை 16.12.2009 இன்று அகதிகளாக இருக்கும் சம்பூர் மக்களுக்கு காணிகளை வழங்கி குடியேற்றுவதற்க்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சருக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக