இந்தோனேசியாவில் ஓசியானிக் வைக்கிங் படகிலிருந்து தரையிறங்க மறுத்துவந்த 78 இலங்கையர்களும் உண்மையான அகதிகளே என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் யு.என்.எச்.ஆர்.சி ஏற்றுக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய சுங்க கப்பலினால் காப்பாற்றப்பட்ட இந்த இலங்கை அகதிகள் இந்தோனேசிய தீவான பிந்தனுக்கு கொண்டு சென்றபோது இவர்கள் ஒருமாதகாலமாக படகிலிருந்து இறங்க மறுத்து தங்களுக்கு அவுஸ்திரேலியாவிடம் புகலிடம் வழங்க வேண்டுமெனக் கோரி வந்தனர். இந்த அகதிகள் எங்கு குடியமர்த்தப்பட வேண்டுமென யுஎன்எச்சிஆரே தீர்மானிக்க வேண்டுமென்று அவுஸ்திரேலியா தெரிவித்து விட்டது. அகதிகள் கப்பலில் இருந்து வெளியேற வேண்டுமென தற்போது எடுக்கப்பட்ட முடிவு அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதையே உறுதிப்படுத்துகிறது என்று தாம் கருதுவதாக அவுஸ்திரேலிய எதிரணி குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார். இந்தோனேசியாவில் உள்ள யுஎன்எச்சிஆர் அலுவலகத்தினால் உண்மையான அகதிகள் என தீர்மானிக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்களை நல்ல மனதுடன் அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்கின்ற போதிலும் அனைத்து அகதிகளையும் எப்பொழுதும் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை என அவர் கூறுகிறார்.
வியாழன், 17 டிசம்பர், 2009
78 இலங்கை தமிழர்களுக்கு இந்தோனேசியாவில அகதிகள் அந்தஸ்து !

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக