
மூதூர் கிழக்குப் பிரதேசமான கடற்கரைச்சேனை கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீழ் குடியேற்றும் நடவடிக்கை நேற்றைய தினம் கட்டைபறிச்சான் விபுளானந்தர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான திரு சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்க மாகாண சபையின் ஆளுநர், திருமலை மாவட்ட அரச அதிபர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி அமைச்சருமான ஏ.எல்.எ நஜீம், பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர், மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்றைய குடியேற்ற நிகழ்வில் (174) குடும்பத்தவர்கள் குடியேற்றப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன. அங்கு மீழ் குடியமர்த்தப்பாடாதிருக்கும் ஏனையவர்களும் விரைவில் குடியமர்த்தப்படுவரென உறுதிமொழி வழங்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேனையூர், கட்டைபறிச்சான், கடற்கரைச்சேனை, சம்பூர், கூனித்தீவு போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் 6.000 பேர்வரை கடந்த 2006ம் ஆண்டுகாலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின்போது வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட அம்மக்கள் மட்டக்களப்பு பிரதேசத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களில் கடந்த காலப்பகுதியில் வாழ்வதற்கான வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு அவர்களுக்கான உதவிகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டநிலையில் அம்மக்களை மீழ்குடியேற்றும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய நேற்றுவரை குடியேற்றப்பட்டுள்ள குடும்பத்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது. சந்தேசபுரம் (99) குடும்பங்கள் இறால்குழி (34)குடும்பங்கள் சேனையூர் (8) குடும்பங்கள் நேற்றைய தினம் கடற்கரைச்சேனை (174) குடும்பங்கள் மேற்படி குடியேற்றப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்கள்தவிர சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு கூனித்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த (1.018) குடும்பங்கள் இன்னும் குடியேற்றப்படவுள்ளனர். மேற்படி மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான திரு சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன் ஈச்சிலம்பற்று கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் (56) குடும்பத்தவர்களை தத்தமது சொந்த வீடுகளில் குடியமர்வதற்கான அனுமதியும் பெற்றக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக