எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் சரத் பொன்சேகாவை அவர் தற்போது வசிக்கும் அரசவிடுதி இல்லத்திலிருந்து வெளியேற்றி விடுமாறு உத்தரவிடக் கோரி நேற்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குருநாகலைச் சேர்ந்த சட்டத்தரணி யு.பி.ஜெயமானே என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆரச பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஜனாதிபதித் தேர்தலில் நிற்கும் ஒருவர் தமது தேர்தல் பணிக்காக அரச விடுதியில் தங்கியிருப்பது முறையற்றது என்றும் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டு வரும் ஒருவர் ஓய்வின் பின்னரும் அரச விடுதியை பயன்படுத்துவது தவறு என்றும் இதன் காரணாமாக அவரை அந்த இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரும் இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வியாழன், 17 டிசம்பர், 2009
சரத் பொன்சேகாவை அரச விடுதியிலிருந்து வெளியேறக் கோரி மனுத்தாக்கல்..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் சரத் பொன்சேகாவை அவர் தற்போது வசிக்கும் அரசவிடுதி இல்லத்திலிருந்து வெளியேற்றி விடுமாறு உத்தரவிடக் கோரி நேற்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குருநாகலைச் சேர்ந்த சட்டத்தரணி யு.பி.ஜெயமானே என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆரச பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஜனாதிபதித் தேர்தலில் நிற்கும் ஒருவர் தமது தேர்தல் பணிக்காக அரச விடுதியில் தங்கியிருப்பது முறையற்றது என்றும் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டு வரும் ஒருவர் ஓய்வின் பின்னரும் அரச விடுதியை பயன்படுத்துவது தவறு என்றும் இதன் காரணாமாக அவரை அந்த இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரும் இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக