வியாழன், 17 டிசம்பர், 2009
சர்வதேச மன்னிப்புசபை கிறிஸ்மஸ்தீவை மூடிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது !
இலங்கையர்கள் உட்பட அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் தீவின் அகதிமுகாமை மூடிவிடுமாறு சர்வதேச மன்னிப்புசபை கோரியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் அகதிகளுக்கான இணைப்பாளர் கிரஹம் தோம் கிறிஸ்மஸ் தீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு திரும்பிய நிலையிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த முகாமில் அதிகளவான அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2008ம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக 60 படகுகளில் சென்ற 2ஆயிரத்து 800பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக