புதன், 16 டிசம்பர், 2009

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே ஆதரவு தீர்மானத்தில் மாற்றமில்லை என்கிறார் சிவநேசதுரை சந்திரகாந்தன் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றமும் கிடையாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை நாம் மாற்றியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்து வரும் கருத்தை மறுத்துள்ள அவர் மக்களை குழப்பும் வகையில் அவை செய்தி வெளியிடுவதாக குறிப்பிட்டார்.
குறிப்பு –கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய நாளேடுகள் என தம்மை அடையாளப்படுத்தும் சில வேசிய நாளேடுகள் மேற்குலக ஏகாதிபத்தியங்களிடம் பெற்றுக்கொள்ளும் டொலர்களுக்காக கிழக்கு மாகாண முதல்வர்பற்றி அடிக்கடி பல உண்மைக்கப்புறம்பான தகவல்களை வெளியிடுவதன்மூலம் கிழக்கு மக்களின் தனித்துவத்தினையும, உறுதியான கொள்கைகளையும் விலைபேச முற்படுவது பத்திரிகாதர்மத்திற்கே பாரிய சவாலாக அமைந்துள்ளது. அத்துடன் டொலருக்காக தாய் நாட்டினைக் காட்டிக்கொடுக்கும் இத்துரோகிகளுக்கான பதிலை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ந் திகதி கிழக்கு மாகாண மக்கள் வழங்கப்போவது உறுதியான விடயம் என்பதனை துரோகிகளின் கவனத்திற்கு நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.
மேற்படி ஊடகங்கள் தங்களையும் குழப்பி மக்களையும் குழப்ப முயல்வதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார். ஜனாதிபதியின் வெற்றிக்கு தமது கட்சி பாடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பினர் மாற்றிக் கொண்டுள்ளதாக சில ஊடகங்கள் கடந்த தினங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக