தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்ட அகதி முகாமிலுள்ள புற்றுநோய் பாதித்த இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 73 குடும்பங்களை சேர்ந்த 263 பேர் வசிக்கின்றனர். இம்முகாமை சேர்ந்த சவுந்தர்ராஜன் (54) என்பவர் சில ஆண்டுகளாக வாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த சவுந்தர்ராஜன் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக