புதன், 16 டிசம்பர், 2009

தேர்தலில் போட்டியிடுவதென்ற சிவாஜிலிங்கம் எம்.பியின் தனிப்பட்ட முடிவே -பா.அரியநெந்திரன் எம்.பி!

ஜனாதிபதி தேர்தாலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ்க் கூட்டமைப்புடன் தொடர்புடையது அல்ல என தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ள போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிட தீர்மானித்து இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக