வியாழன், 17 டிசம்பர், 2009

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் திருக்கோவில் அலுவலகம் மீது தாக்குதல்.. பிள்ளையான் -கருணாதரப்பினர் மோதல்!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் முதலாம் குறிச்சியில் அமைந்துள்ள முரளிதரன் (கருணா) தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காரியாலயத்தின் மீது சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தியதாக கருணா தரப்பால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை தாக்குதல் நடத்தியவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் மூவர் காயமடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தெரிவித்துள்ளனர் அத்துடன் தமது தரப்பில் இருவர் காயமடைந்ததாகவும் முரளிதரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்பலிகளே காரணம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குற்றம் சுமத்துகின்ற போதிலும் அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆசாத் மௌலானா மறுத்துள்ளார். தாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த போது முரளிதரன் தரப்பினரே முதலில் தாக்குதல் நடத்தியதாகவும் ஆசாத் மௌலானா மேலும் தெரிவித்துள்ளார். பிள்ளையான் தரப்பினரும் பொதுமக்கள் எனும் போர்வையில் கருணா தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதினால் பிள்ளையான் தரப்பில் வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன் மூவர் காயம் அடைந்துள்ளனர். அதேபோல் கருணா தரப்பிலும் இருவர் காயமடைந்ததுடன் பரஸ்பரம் இருபகுதியினரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக