செவ்வாய், 15 டிசம்பர், 2009

தமிழ் கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினார் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளார். இதுபற்றி பாராளுமன்ற உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நான் இன்று தேர்தல்கள் செயலகத்தில் செலுத்தியுள்ளேன். எனினும் நாளைக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ வேட்பாளர் ஒருவரை தீர்மானித்து களமிறக்குமாக இருந்தால் நான் என்னுடைய நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல் விட்டுவிடுவேன். அதாவது தமிழ்க் கூட்டமைப்பு கட்சி சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்படுமாக இருந்தால், அதைப்போல தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் நியமனப் பத்திரமும் தாக்கல் செய்யப்படுமாக இருந்தால் நான் எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யாமல் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்வேன். தமிழ்க் கூட்டமைப்பு இவ்வாறு வேட்புமனுவைத் தாக்கல் செய்யாவிடில் நான் எனது வேட்புமனுவை தாக்கல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக