வெள்ளி, 22 மே, 2015

பொலிகண்டி இ,த,க மாணவர்கள் கண்டன பேரணி உணர்வுகளால் தகிப்பு !!! (photos)


புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சகோதரி வித்தியா பாலியல் வன்புணர்வினால் படுகொலை செய்யப்பட்டமையைக்கண்டித்து பொலிகண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை மாணவ சமூகங்கள் இணைந்து இன்று புதன்கிழமை கண்டன பேரணியில் ஈடுபட்டிருந்தனர். 

காலை 11 மணிக்கு பாடசாலை வாளாகத்திலிருந்து பாலாவி வீதி -சிவபாத சுந்தரணார் வீதி-ஆலடி ஒழுங்கை-பத்திரகாளியம்பாள் ஆலய வீதி போன்ற வீதிகளிலூடாக பதாதைகள் தாங்கியவாறும் கோசங்கள் எழுப்பியவாறும் கொட்டும் வெய்யிலில் பொலிகண்டிக்கிராமத்தையே சுற்றி வலம் வந்த காட்சி உணர்வுகளால் உறையவைத்தது.


இதன்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்காதே! பெண்கள் உரிமையைப்பாதுகாப்போம் ! பாலியலுக்கு மாணவர்கள் பலிக்கடாயா! வித்தியாவின் கொலைக்கு மரண தண்டனை விதி! என்ற வாசகங்களை சுலோக அட்டைகளில் பொறித்தவாறும் கோசங்களை எழுப்பிய மாணவர்கள் குரல் ஊர் மட்டுமல்ல உலகமே அதிர்ந்தது!  

வித்தியாவின் நீதிக்கான கண்டனபேரணியில் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மணிகள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் வீதிகளில் நின்றவாறும் மாணவர்களின் உணர்வு தகிப்பு போராட்டத்திற்கான ஆதரவினை வழங்கியிருந்தமை பொலிகை மண்ணே விழித்திருந்ததென்றால் மிகையாகாது.

மேலும் 1978 ம் ஆண்டுகாலப்பகுதியில் பொலிகண்டி இந்து தமிழக்கலவன் பாடசாலை பழைய மாணவி கமலா கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக