யாழ். இணுவையூர் குமர நர்த்தனாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வானது இணுவில் மேற்கு குமர நர்த்தனாலய மண்டபத்தில இன்று நடைபெற்றது. மன்ற நிர்வாகி நிருத்திய வேந்தன் நடராஜா குமாரவேல் அவர்களின் ஏற்பாட்டில் செல்வன் கணேசலிங்கம் பவன் அவர்களின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சைவப்புலவர் திருவாளர் திருஞானசம்பந்தபிள்ளை அவர்களும் (ஓய்வுநிலை அதிபர், இணுவில் மத்திய கல்லூரி) அவருடைய பாரியார் திருமதி. சகுந்தராம்பிகை அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், கௌரவ விருந்தினர்களாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கலாபூஷணம் நாட்டிய சுரபி ஸ்ரீமதி பத்மினி செல்வேந்திரகுமார் (ஓய்வு பெற்ற நடனப் பாட ஆசிரிய ஆலோசகர், யாழ் கல்வி வலயம்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக