வவுனியா பிரதேச 27 ஆவது இளைஞர் விளையாட்டுவிழாவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் இன்றையதினம்(26/04) கபடி மற்றும் எல்லே போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியில் உதயதாரகை அணியை வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் தேசிய இளைஞர் கழகம் சம்பியனானது. கோவில்குளம் இளைஞர் கழகம் பெயர் மாற்றப்பட்டு தற்போது தமிழ் தேசிய இளைஞர் கழகமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக