சனி, 11 ஏப்ரல், 2015

வலி வடக்கில் இன்று காணிகள் மக்களிடம் கையளிப்பு..!!(படங்கள் இணைப்பு)

வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக வலி வடக்கில் இராணுவம் வசம் இருந்த பொது மக்களின் காணிகளில் இன்றையதினம் தெல்லிப்பளையின் வறுத்தலைவிளான் பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமது இடங்களை குடும்பத்துடன் வந்து பார்வையிட்டனர். 


எனினும் இன்று கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட தைஜிட்டி தெற்கு, மயிலிட்டி, வீமன்காமம் போன்ற பிரதேசங்கள்  இன்னும் கையளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக