
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் மட்டக்களப்பில் நடைபெற்ற மத்தியகுழுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் ஈபிஆர்எல்எவ் வாவிக்கரை தலைமையகத்தில் மத்தியகுழுக் கூட்டத்தையும் பிரதிநிதிகள் சந்திப்பையும் கலந்துரையாடலையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்பியுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பி. சிவசக்திஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் நடாத்தியது.
இக்கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மத்தியகுழு உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அங்கு துரைரட்ணம் மேலும் பேசுகையில்:
இன்று மத்தியிலும் மாகாணத்த்திலும் ஆட்சிமாற்றம் கண்டுள்ளது.இந்நிலையில் தமிழ்மக்களுக்கான அதிகாரப்பங்கீடு நடைமுறைக்குவரவிருக்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவறாது உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாகாணசபையை பலப்படுத்தவேண்டும் உள்ளுராட்சி மன்றங்களை பலப்படுத்த வேண்டும். போரால் இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களது அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக் கவேண்டும். இழந்த காணிகளை மீள பெற்றுக் கொடுக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற வேண்டும் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவேண்டும் அப்படி பல கடமைகள் எம்முன் உள்ளன.
இதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒற்றுமையாக உறுதியாக இருக்கவேண்டியது அவசியமாகும். கூட்டமைப்பு பலமாக இருக்கும் பட்சத்தில்மட்டும்தான் அது சாத்தியமாகும். எனவே அது பதிவதனூடாகத்தான் பலமாகும்.
பல தடவைகளில் இப்பதிவு விடயம் எடுத்தாளப்பட்டபோதிலும் இன்னமும் தமிழரசுக்கட்சியால் தாமதம் காட்டபப்டுவதாகத் தெரிகிறது.எனவே நாம் எமது தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களிடம் பதிவுசெய்யும் விடயத்தை விரைவாக செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் பதில்!
அங்கு த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி. பதிலளித்துப்பேசுகையில் கூறியதாவது:
த.தே.கூட்டமைப்பை பதிவுசெய்வதற்கான வேலைகளில் தலைவர்கள் ஈடுபட்டாலும் தமிழரசுக்ட்சி ஒருவித தாமதப்போக்கைக் கடைப்பிடிக்கின்றது. இருந்தும் ஏனைய கட்சிகள் பதிவதில் அக்கறையுடன்தானிருக்கின்றன. தமிழரசுக்கட்சி ஏனிந்த தாமதத்தையும் மௌனப்போக்கையும் கடைப்பிடித்துவருகின்றத என்பது தெரியாமலுள்ளது.
கூட்டமைப்பைப் பதிவுசெய்வதில் தமிழரசுக்கட்சிக்கு உடன்பாடு இல்லாத மாதிரி நடந்துகொள்கின்றது. கடந்த 12வுரடங்களாக நாம் உள்ளிருந்து இதற்கான அழுத்தங்களை கொடுத்துத்தான்வருகின்றோம்.
எதுஎப்படியிருந்தாலும் கூட்டமைப்பு பதிவுசெய்தேயாகவேண்டும். இன்றேல் தோழர் துரைரட்ணம் கூறியதுபோன்று பாதிப்பு எம்மக்களுக்குத்தான் தவிர தலைவர்களுக்கல்ல. அண்மையில் வந்த இந்திய தலைவர்களும் இதனை சூசகமாக ஆனால் வலியுறுத்திக்கூறிச்சென்றுள்ளனர்.
எனவே விரைவாக கூட்டமைப்புத் தலைமைக்குழுவைக்கூட்டி பதிவுசெய்யும் செயற்பாட்டை துரிதமாக்குமாறு மீண்டும் எடுத்துக்கூறுவேன். இங்கு மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் கூறிய கருத்துக்களை மதிக்கின்றேன்.
விசாரணையின்றி சிறையில்வாடும் தமிழ்க்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்கு அப்பால் வடக்ககிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சிக்கு ஒப்பான அதிகாரப் பரவலாக்கலுடனான நிரந்தரத்தீர்வுமுன்வைக்கப்படவேண்டும் என்ற முக்கிய விடயங்களில் நாம் கண்ணும் கருத்துமாக இருப்போம். இதில் யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை என்ற விடயத்தை ஆணித்தரமாக இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக